ஞாயிறு, 14 மார்ச், 2010

அரண்மனை கட்ட நிதி திரட்டுவோம்

தோழர்களே வணக்கம்.

நம் தமிழ்நாட்டு மாமன்னருக்கு அரண்மனை கட்ட நிதி திரட்டுவோம், வாருஙகள்.

நேற்று சென்னையில் நடைப் பெற்ற புதிய சட்டப்பேரவை திறப்பு விழாவில் முதல்வர் (இந்நாட்டு மன்னர்) கருணாநிதி பெருமையுடன் பேசியது.

“நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை...

எனக்கென்று ஏதுமில்லை....
இந்தியாவின் மிகச்சிறந்த இந்த கட்டிடம் உருவாக காரணமாக இருந்த நான்;

மிகமிக சாமான்யமானவன் - சாதாரண ஒரு குடும்பத்திலே - ஒரு சிறிய கிராமத்திலே பிறந்தவன் - எனக்கென்று எந்தவிதமான குடும்ப பெருமையும் இல்லை. நடுத்தர குடும்பத்தை விட குறைந்த வசதி படைத்த குடும்பம் தான் என்னுடையது. எந்த கல்லூரியிலும் சேர்ந்து நான் பட்டம் பெற்றவன் அல்ல. "நன்றாகப்படி'' என்று அண்ணா என்னை வாழ்த்தினார். நல்லவர்களுக்கெல்லாம் "படிந்து'' நடக்க கற்றுக் கொண்டேனே அல்லாமல் உயர்கல்வி படிப்பை கற்றுத்தேர்ந்தவன் அல்ல நான்.”

நம் மன்னர் (முதல்வர்) இப்படி மஞ்சள் கடுதாசி கொடுக்கும் அளவுக்கு வந்ததற்கு யார் காரணம். நம் மக்களின் பேராசையா இல்லை விலை வாசி உயர்ந்ததைக் காரணம் கட்டி நாம் ஓட்டுக்கான விலையை ஏற்றியதா தெரியவில்லை.

வீடு கட்ட இடம் கொடுத்த மன்னருக்காக நடிகர்கள் எந்த ”பயமுறுத்தலும்” இல்லாமல் பாராட்டு விழா நடத்தியதை போல் பொது மக்களாகிய நாம் ஓரு ரூபாய்க்கு அரிசி,வீடுகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், அதில் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப (உ.ம். மானாட மயிலாட, ஒடி விளையாடுப் பாப்பா) சொந்தமாய் தொலைக்காட்சி நிறுவனமும் தந்த தியாகிக்கு தண்டல் வசூலித்து ஒரு அரண்மனை கட்டி கொடுக்க வேண்டாமா?

குடிசைப் பகுதி மக்களை கூவத்தின் நாற்றத்திலிருந்து விடுவித்து IT மக்கள் வாழும் சோழிங்கநல்லுரில் “வீடு” கட்டிக் கொடுத்து அவர்கள் வாழ்வாதரத்தை உயர்த்திய அன்னலுக்காக சிந்தியுங்கள் “குடி” மக்களே. உங்கள் குடல் வெந்து விடக் கூடாதே என்று அரசாங்க செலவில் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் மன்னருக்காக ஒரு அரண்மனை கட்டி எழுப்புவோம் வாருங்கள்.

என்றென்றும் நன்றியுடன்

ராஜசேகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு