ஒரு ஈழத்து தங்கையின் கதறல்
'தோழிகளோடு சோழி விளையாடிக் கொண்டிருந்தாள் அக்கா;
வீட்டின் முன்வெளியில் கோலி உருட்டிக் கொண்டிருந்தான் தம்பி.;
அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டிருந்தாள் அம்மா -
அடுத்த விட்டு அங்கிளுடன் ஆமிக்காரன் பற்றிக்
கதைத்துக் கொன்டிருந்தார் அப்பா '.

தோட்டத்துப் பக்கம் தோழிகளுடன்
குளிக்கச் சென்ற எனக்கு
இந்த காட்சிகள் எதுவும் கண்ணிலிருந்தும்
நெஞ்ச்ிலிருந்தும் விலகவில்லை
காதைக் கிழித்தது பயங்கர வெடிச் சப்தம்.
லாஞ்சரோ, ஷெல்லோ எது அவர்கள் உயிரைக் குடித்தது
என தெரியவில்லை.
கந்தல் துணியோடும் காஞ்சு போன ரொட்டித் துண்டோடும்
ஆமிக்காரன் முகாமில் சுருண்டு கிடந்த எனக்கு
தனி ஈழமோ, முழு சிங்களமோ எது சரியென விளங்கவில்லை
"நல்ல வேளை நீ பெரிய மனுஷியாகல"
குறுக்கு வலியால் குறுகிப் படுத்திருந்த என் சினேகிதியின்
புலம்பலுக்கான காரணம் எனக்கு விளங்கவில்லை.
கதவு திறந்து உள்ளே வருகின்றனர்
ஆமிக்காரனும் அவன் புது பக்கத்து நாட்டு சினேகிதனும்.
பொழுது புலர இன்னும் நேரம் வரவில்லை
தூரத்தில் ஓலிக்கிறது

"புத்தம் சரணம் கச்சாமி "
நாளைக்கு எங்கள் விளை நிலத்தின் நிலை
அம்மாயி தாத்தா அம்மாவுக்கு
சீதனமாய் தந்த நிலம்
அள்ள அள்ள குறையாத
அமுத சுரபிடா - இது
பெருமையாய் சொல்வாள் அம்மா.
இந்த வருசமும் நல்ல விளைச்சல் தான்
இளந்தாரிப் பய தோளு கணக்காய்
வீங்கியிருந்த கரும்பும்,
புதுசா சமைஞ்ச பொன்னு போல
நாணி தலை சாய்ஞ்ச கதிரும் சொன்னது
ஆத்தா சொல்லு பொய்யில்லை.
கார்ல வந்து காட்டை சுத்திப்பார்த்த
அம்பானி மகன்கிட்ட
தலைய சொரிஞ்சுகிட்டு கேட்டேன்
டன்னுக்கு ஐநூறு ருபாய் சேர்த்து கொடு.
நாளைக்கு எங்கள் விளை நிலத்தின் நிலை
அம்மாயி தாத்தா அம்மாவுக்கு
சீதனமாய் தந்த நிலம்
அள்ள அள்ள குறையாத
அமுத சுரபிடா - இது
பெருமையாய் சொல்வாள் அம்மா.
இந்த வருசமும் நல்ல விளைச்சல் தான்
இளந்தாரிப் பய தோளு கணக்காய்
வீங்கியிருந்த கரும்பும்,
புதுசா சமைஞ்ச பொன்னு போல
நாணி தலை சாய்ஞ்ச கதிரும் சொன்னது
ஆத்தா சொல்லு பொய்யில்லை.
கார்ல வந்து காட்டை சுத்திப்பார்த்த
அம்பானி மகன்கிட்ட
தலைய சொரிஞ்சுகிட்டு கேட்டேன்
டன்னுக்கு ஐநூறு ருபாய் சேர்த்து கொடு.