செவ்வாய், 26 ஏப்ரல், 2011

Vazhai needs mentors


Vazhai needs mentors to guide young age of backward region.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வெள்ளி, 29 அக்டோபர், 2010

புரட்சி மொழிகள் - தந்தைப்பெரியார்

 புரட்சி மொழிகள் - தந்தைப்பெரியார்
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
  • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
  • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  • விதியை நம்பி மதியை இழக்காதே.
  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்.
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஞாயிறு, 25 ஜூலை, 2010

நீங்கள் இந்தியக்குடிமகனா ?

நீங்கள் இந்தியக்குடிமகனா ?

நீங்கள்

போலி மருந்து விற்பவரா?
வரி ஏய்ப்பு செய்யும் தொழிலதிபரா?
சுரங்கத் தொழில் மோசடியில் ஈடுபடுபவரா?
போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பவரா?
மக்கள் பணத்தில் உண்டு கொழிக்கும் அரசியல்வாதியா?
கவலை வேண்டாம்.
தேசத்தின் சட்டஙகள் உங்களைப் பாதுகாக்கும்.

பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் எழுப்புவரா?
இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லும் மீனவர்களுக்காக போராட்டம் நடத்துபவரா?
இனப்படுகொலையை எதிர்க்கச் சொல்லி அரசுக்கு நெருக்கடி கொடுப்பவரா?
எச்சரிக்கை!
உங்கள் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதற்காக.

செவ்வாய், 13 ஜூலை, 2010

இந்த வலைப்பதிவில் தேடு